சிற்பங்கள்

          சிற்பம் என்பது சில்ப என்ற வட சொல்லிலிருந்து உருவானது. சிலாரூபம் என்பதிலிருந்து சிலை என்ற தமிழ்ச் சொல் வழங்கப்படுகிறது. ஒருவர் தன் கண்களால் கண்ட உருவங்கள் அல்லது கற்பனை உருவங்களை வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். உருவத்தை அமைத்தல், படைத்தல், சமைத்தல் சிற்பக் கலை ஆகும். பல்வேறு பண்பாடுகளில் சிற்பங்கள் பெரும்பாலும் சமய வழிபாடுகளை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. சிற்பங்கள் பண்டைய கால சமயம், புராணம், அரசியல், சமூகம், கலைத் தொடர்பான வெளிப்பாடாக இருந்தன.

          சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்...

மேலும் படிக்க