மண்ணாலான சிற்பங்கள் தமிழகத்தில் பழங்காலத்தில் மிகவும் போற்றப்பட்டு வந்தது. மண்ணையிட்டு செய்யப்பட்டவை ஆதலின் அவற்றிற்கு 'மண்ணீடு’ என்ற பெயர் உண்டு. மண்ணிட்டில் அழகிய சிற்பங்களைச் செய்பவர்களை மண்ணீட்டாளர்’ என்று நம் இலக்கியங்கள் கூறும். மண்ணிடு என்று கூறும்போது களிமண்ணால் பாவை செய்து தீயிலிட்டுச் சுடப்பட்டதையும் மண்பொம்மை என்றே கூறுவர். தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காவிரிப்பூம்பட்டினம், உறையூர், காஞ்சி, அரிக்கமேடு, கொற்கை ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகளில் பண்டைய சுடுமண் பாவைகள் கிடைத்துள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் இவற்றின் அழகு போற்றத்தகுந்ததாக உள்ளது.
...

இதற்குப் பின்னர் பல்லவர் காலத்தவை அல்லது சோழர் காலத்தவை என்று குறிக்கத்தக்க மண்பாவைகள் ஏதும் கிடைக்க வில்லை. மதுரை வீரன், வேடியப்பன், சுடலைமாடன் முதலிய ஊர்த்தெய்வங்களின் கோயில்களில் உயரமாகவும் எழிலாகவும் அமைக்கப்பட்ட மண்ணாலான குதிரை, யானைகளின் உருவங்களும் தமிழகத்தில் ஏராளம் உண்டு. இவற்றின் காலத்தைக் கணிக்க முடியாவிட்டாலும் இவற்றின் அழகைப் போற்றாமல் இருக்கமுடியாது. இக்கலை தொடர்ந்து வந்திருக்கிறது என்பதற்கும் இவை எடுத்துக்காட்டு. இந்திய நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மண் பொம்மைக்கென்றே நவராத்திரிதோறும் விழா நடத்துகிறோம். இதில் ஏராளமான சுடுமண் பாவைகள் இடம்பெறுவது அனைவரும் அறிந்ததே.