முகப்பு வரலாற்றுச் சின்னங்கள் கல்லறைகள்
கல்லறைகள் என்பது இறந்தவர்களைப் புதைத்து வைத்த நினைவிடமாகும். அந்த நினைவிடங்கள் கற்களைக் கொண்டு அறைகளாகப் பகுக்கப்பட்டு பெருங்கற்காலத்தில் அமைக்கப்பட்டன. அவை முன்னோர்களின் வழிபாட்டிடங்களாகத் திகழ்ந்தன. இத்தகைய பழங்குடியினரின் பண்பாடானது தற்போதைய நிலையில் கிறித்துவம் மற்றும் இசுலாம் சமயங்களில் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது எனலாம். கிறித்துவத்தில் ஒரு புனிதமான புதைகுழியின் மேல் கட்டப்பட்ட ஒரு கட்டிடக் கோவில் கல்லறை எனப்படுகிறது. இத்தகைய கல்லறைகள் பொதுவாக ஆட்சியாளர், அதிகாரிகள், வீரர்கள் ஆகியோருக்கு அமைக்கப்பட்டன. இக்கல்லறைகள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர், டச்சு, பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய ஆட்சிக் காலத்தில் அதிகமாகத் தோன்றின. திப்புசுல்தானின் உறவினர்கள் கல்லறைகள் வேலூரில் அமைந்துள்ளன....