பல்லவர்

          பல்லவ மன்னர்கள் தமிழகத்தை, கி.பி.3-ஆம் நூற்றாண்டிலிருந்து 9-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். துறையில் ஒப்பற்ற பணியைச் செய்த இம் மன்னர்களுடைய காசுகள் இதுவரையில் சரியாக ஆராயப்படவில்லை. கிடைத்துள்ள காசுகள் பெரும்பாலும் செப்புக் காசுகளாகவே உள்ளன. மெல்லிய தகடுபோல் உள்ள அவற்றின் ஒருபுறத்தில் காளை நின்ற அல்லது கிடந்த நிலையில் அமைந்திருப்பதைக் காணலாம். அதைச் சுற்றி கிரந்த எழுத்தில் மன்னனுடைய பெயர் காணப்படும். மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் மற்றும் இராஜசிம்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் வெளியிட்ட காசுகள் குறிப்பிடத்தக்கவை.

          ஸ்ரீநிதி


மேலும் படிக்க