பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் உடைய காலத்தையே வரலாற்றுக் காலம் என்கிறோம்.
ஒரு நாடு, இனம், மொழி, பண்பாடு, தனிமனிதன், தலம், பொருள், போர் எனப் பல இருந்தாலும், முக்கியமாகப் பார்க்கப்படுவது உலகில் மனித இனம் தோன்றிப் பரவிப் பெருகி அழிந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்த இனங்களின் பழைமை, தொன்மை, நாகரிகம், வாழ்வியல் என்பவற்றை எழுதுவது வரலாறு.
இவ்வரலாற்...

இவ்வரலாற்றின் தொடக்கமாவது எழுத்துச் சான்றுகள் கிடைக்கப் பெறுவதில் இருந்து தொடங்குகிறது எனலாம். மேற்பரப்பாய்வில் எழுத்துச்சான்றுகள் மற்றும் குறியீடுகள் கிடைக்கின்ற பகுதிகளை அகழாய்வுகள் செய்வதை வரலாற்றுக் கால அகழாய்வுகள் எனலாம்.மேலும் சங்க இலக்கியங்கள், வெளிநாட்டு பயணியர் குறிப்புகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் தொல்லியல் இடங்களை அகழாய்வு செய்வதனையும் இப்பிரிவில் சேர்க்கலாம்.
தமிழக அகழாய்வுகளில் பெரும்பாலும் சங்க கால ஊர்களான கரூர், பூம்புகார், அழகன்குளம், அரிக்கமேடு, பொருந்தில், வெள்ளலூர், மாங்குளம், மாங்குடி, கொடுமணல், கொற்கை, வசவசமுத்திரம், கீழடி ஆகியவை அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. அவை பண்டைய தமிழக சமூக, பண்பாட்டு வரலாற்றை அறிய உதவுவதோடு தமிழக வரலாற்றுக் காலத்தை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்லவும் உதவுகின்றன.