பண்டைய அரசியல், பொருளாதார வரலாற்றினை அறிய மிகவும் முதன்மையாக விளங்குவது காசுகள் ஆகும். தமிழக வரலாற்று நிறுவலில் கல்வெட்டுகளை தொடர்ந்து நாணயவியலின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நோக்கில் தமிழக வரலாற்று நிறுவலில் சில முக்கியமான மன்னர்கள் வெளியிட்ட காசுகளைக் கொண்டு அக்கால அரசியல், பொருளாதார, வணிக நிலைகளை கணக்கிடலாம்.
பழங்காலத்தில் மன்னர்களால் வெளியிடப்பட்டக் காசுகள் அகழாய்வுகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் கிடைக்கின்றன. ஆற்றுப்படுகைகளில் கிடைத்த காசுகளே எண்ணிக்கையில் அதிகம். இக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களால் ஆனவை. வட்டம், சதுரம், நீள்வட்டம், செவ...
பண்டைய அரசியல், பொருளாதார வரலாற்றினை அறிய மிகவும் முதன்மையாக விளங்குவது காசுகள் ஆகும். தமிழக வரலாற்று நிறுவலில் கல்வெட்டுகளை தொடர்ந்து நாணயவியலின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நோக்கில் தமிழக வரலாற்று நிறுவலில் சில முக்கியமான மன்னர்கள் வெளியிட்ட காசுகளைக் கொண்டு அக்கால அரசியல், பொருளாதார, வணிக நிலைகளை கணக்கிடலாம்.
பழங்காலத்தில் மன்னர்களால் வெளியிடப்பட்டக் காசுகள் அகழாய்வுகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் கிடைக்கின்றன. ஆற்றுப்படுகைகளில் கிடைத்த காசுகளே எண்ணிக்கையில் அதிகம். இக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களால் ஆனவை. வட்டம், சதுரம், நீள்வட்டம், செவ்வகம், உருளை முதலிய வடிவங்களில் காசுகள் கிடைக்கின்றன. இக்காசுகளில் மன்னர்களின் உருவம், எழுத்துப்பொறிப்புகள், கடவுளின் உருவம், மற்றும் மலை, ஆறு, வேலியிட்ட மரம், சூரியன், யானை முதலிய இயற்கைச் சின்னங்கள் ஆகியவை காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துப் பொறிப்புள்ள காசுகள் அரசனின் பெயரையும், காலத்தையும், அரசியல்-வணிக வரலாற்றினையும் அறிய உதவுகின்றன.
தமிழகத்தில் கிடைத்த காசுகள் மற்றும் தமிழக நாணயவியல் பற்றிய தோற்றமும் மன்னர்கள் வெளியிட்ட காசுகளும் அவை வரலாற்று நிறுவலில் வகித்த பங்குகளையும் பற்றியும் அறிய விழைதல் என்பது காசு இயலாகும். இதில் முத்திரைக்காசுகள், சங்ககாலம், ரோமானியர், சாதவாகனர், களப்பிரர், சீனர், பல்லவர், சோழர், பாண்டியர், கண்டகோபாலன், வீரச்சம்பன், விசயநகர வேந்தர், மாவலி வாணாதிராயர், வேணாட்டார், நாயக்கர், மராட்டியர், சேதுபதி, ஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர் ஆகியவர்கள் வெளியிட்ட காசுகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழக வரலாற்றினை முழுமையாக அறிய முடிகிறது.