அரண்மனைகள்

          தொல்லியல் சின்னங்களுள் ஒன்றாக பண்டைய அரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் ஆகியோர் வாழ்ந்து விட்டுச் சென்ற அரண்மனைகளைக் குறிப்பிடலாம். இவை தொல்லியலில் வாழ்விடங்கள் எனப்படுகின்றன. இத்தகைய வாழ்விடப் பகுதிகள் தமிழ் நாட்டில் அரண்மனைகளாக உள்ளன. கங்கை கொண்ட சோழபுரம், பழையாறை, திருமலை நாயக்கர் மகால், தஞ்சை அரண்மனை, இராமநாதபுரம் அரண்மனை, போடிநாயக்கனூர் அரண்மனை ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை மரபுச் சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கட்டிடங்கள் தமிழகத்தின் பண்டைய கட்டடக் கலை வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது. மேலும் கலை நுட்பம் மற்றும் அதனோடு தொடர்புடைய பண்பாட்டினையும், வாழ்வியல் நிலைகளையும் காட்டி நிற்கின்றன.

...

மேலும் படிக்க