சேர மன்னர்கள் புலவர்களைப் போற்றி அவர்களுக்குப் பொற் காசுகள் கொடுத்தார்கள். நார்முடிச்சேரல் என்பவன் காப்பியனாருக்கு நாற்பத்து நூறாயிரம் 'பொன்" பரிசு கொடுத்தான். ஆடு கோட்பாட்டு சேரலாதன் நச்செள்ளையாருக்கு ஒன்பது 'கா' பொன்னும் நூறாயிரம் காணமும் பரிசு கொடுத்தான். செல்வக் கடுங்கோ என்ற சேரன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பரிசு கொடுத்தான்.
திருவாங்கூரைத் தலைநகராகக் கொண்டு சேரர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் ‘அனந்த பத்மநாபசுவாமியிடம்’ மிகுந்த பக்தி பூண்டவர்கள். தங்களைத் ‘திருவடி’, ‘திருப்பாப்பூர்’ மூத்த திருவடி’ என்று அழைத்...
சேர மன்னர்கள் புலவர்களைப் போற்றி அவர்களுக்குப் பொற் காசுகள் கொடுத்தார்கள். நார்முடிச்சேரல் என்பவன் காப்பியனாருக்கு நாற்பத்து நூறாயிரம் 'பொன்" பரிசு கொடுத்தான். ஆடு கோட்பாட்டு சேரலாதன் நச்செள்ளையாருக்கு ஒன்பது 'கா' பொன்னும் நூறாயிரம் காணமும் பரிசு கொடுத்தான். செல்வக் கடுங்கோ என்ற சேரன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பரிசு கொடுத்தான்.
திருவாங்கூரைத் தலைநகராகக் கொண்டு சேரர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் ‘அனந்த பத்மநாபசுவாமியிடம்’ மிகுந்த பக்தி பூண்டவர்கள். தங்களைத் ‘திருவடி’, ‘திருப்பாப்பூர்’ மூத்த திருவடி’ என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்களுடைய காசுகளில் இரண்டு பாதங்கள் (திருவடிகள்) காணப்படும். அதன் கீழ் ஒரு வில்லும் இருக்கும். பின்புறம் ‘கலியுக ராமன்’ என்று தமிழில் காணப்படும். மற்றொரு காசில் ஒருபுறம் நின்ற மனித உருவமும் பின்புறம் 'சேரகுலராமன்' அல்லது 'பூதல வீர' என்ற பெயரும் எழுதப்பட்டுள்ளன. பாஸ்கர ரவிவர்மன் என்பவன் வெளியிட்ட காசில் 'பாஸ்கர’ என்று எழுதப்பட்டுள்ளது. சிலகாசுகளில் ஒருபுறம் யானையும், அதன் தலையில் 'மா' என்ற எழுத்தும் இருக்கும். இது மார்த்தாண்டவர்மன் என்ற புகழ் பெற்ற அரசன் வெளி யிட்ட காசு. இன்னும் சில காசுகளில் ஒரு புறம் ‘யானை, வில், பனைமரம் மூன்றும் இருக்கும். இவை சேரர்கள் வெளியிட்ட காசுகள்.