மனிதன் தான் கண்ட காட்சிகளையும், நிகழ்வுகளையும் அனுபவங்களையும் பிறரோடு பகிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இது தொல் பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. பழங்கால வேட்டைச் சமூகத்தில் மொழி மற்றும் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் தகவல் பரிமாற்றத்தில் ஓவியங்களே காட்சி மொழியாக உலகெங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது கூடுதலாக அது அலங்காரமாகவும் இருந்துள்ளது.
இவ்வோவியங்கள் ஆரம்ப காலத்தில் குகை மற்றும் பாறை ஒதுக்குகளிலும் பின்னர் வழிபாட்டு தலங்களிலும், அரண்மனை மற்றும் மாட மாளிகைகளிலும் காணப்படுகின்றன. துவக்கத்தில் தனி நபரின் சிந்தையில் வெளிப்பட்ட கருப்பொருட்கள் வரையப்பட்டன ப...
மனிதன் தான் கண்ட காட்சிகளையும், நிகழ்வுகளையும் அனுபவங்களையும் பிறரோடு பகிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இது தொல் பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. பழங்கால வேட்டைச் சமூகத்தில் மொழி மற்றும் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் தகவல் பரிமாற்றத்தில் ஓவியங்களே காட்சி மொழியாக உலகெங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது கூடுதலாக அது அலங்காரமாகவும் இருந்துள்ளது.
இவ்வோவியங்கள் ஆரம்ப காலத்தில் குகை மற்றும் பாறை ஒதுக்குகளிலும் பின்னர் வழிபாட்டு தலங்களிலும், அரண்மனை மற்றும் மாட மாளிகைகளிலும் காணப்படுகின்றன. துவக்கத்தில் தனி நபரின் சிந்தையில் வெளிப்பட்ட கருப்பொருட்கள் வரையப்பட்டன பின்னர் பல்வேறு மத மற்றும் சமூக கருத்தாக்கங்கள் ஓவியங்களாக உருவாக்கம் பெற்றது. மீண்டும் சமகால கலைப் படைப்புக்களில் தனி நபர் கருத்து மற்றும் அழகியல் சித்தாந்தங்கள் ஓவியங்களாக பரிணமித்து வருகின்றது.