தொல்லியல் சின்னங்கள் என்பது பண்டையக் கால வழிபாட்டுக் கட்டுமானங்கள், வரலாற்றுக் கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் கோட்டைகள், அரண்மனைகள், கல்லறைகள், நினைவுச் சின்னங்கள், குகைத்தளங்கள், குடைவரைக் கோயில்கள், மடைத்தூம்புகள், அணைகள் ஆகியன அடங்கும். இக்கட்டுமானங்கள் வரலாற்று கட்டுமான ஆவணங்களாக நிலைபெற்றுள்ளன. இவைகள் மரபுச் சின்னங்களாக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழமை மாறாமல் அவற்றில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதும், புனரமைப்பு பணிகளை செய்வதும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மேற்கண்ட பிரிவுகளில் உள்ளடங்கிய தொல்லி...
தொல்லியல் சின்னங்கள் என்பது பண்டையக் கால வழிபாட்டுக் கட்டுமானங்கள், வரலாற்றுக் கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் கோட்டைகள், அரண்மனைகள், கல்லறைகள், நினைவுச் சின்னங்கள், குகைத்தளங்கள், குடைவரைக் கோயில்கள், மடைத்தூம்புகள், அணைகள் ஆகியன அடங்கும். இக்கட்டுமானங்கள் வரலாற்று கட்டுமான ஆவணங்களாக நிலைபெற்றுள்ளன. இவைகள் மரபுச் சின்னங்களாக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழமை மாறாமல் அவற்றில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதும், புனரமைப்பு பணிகளை செய்வதும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மேற்கண்ட பிரிவுகளில் உள்ளடங்கிய தொல்லியல் சின்னங்கள் மத்தியத் தொல்லியல் துறையினராலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினராலும் மரபு சின்னங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.