தமிழகத்தில் நீர்நிலைகள் தொடர்பான கட்டுமானங்கள் அதிக அளவில் காணக் கிடைக்கின்றன. பண்டைய கால அரசர்களும், மக்களும் வெட்டுவித்த கிணறுகள், ஏரிகள், குளங்கள், அணைகள் யாவும் தமக்கென வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்நீர் நிலைகளின் கரைகளில் அதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மடைக்கல்வெட்டுகள், தூம்புக் கல்வெட்டுகள் என இவை அழைக்கப்படுகின்றன. அரசர்கள் வெட்டுவித்த குளங்களின் படித்துறைகளில் வாழ்வியல் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஏரிகள் தொடர்பான கல்வெட்டு ஆவணங்கள் அவ்வூரின் கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் பாதுகாத்து, பராமரிக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களாகும்.
மேலும் பழங்குடி மக்களின் வாழ்விடப்பகுதிகளில் அவர்களின் கு...
தமிழகத்தில் நீர்நிலைகள் தொடர்பான கட்டுமானங்கள் அதிக அளவில் காணக் கிடைக்கின்றன. பண்டைய கால அரசர்களும், மக்களும் வெட்டுவித்த கிணறுகள், ஏரிகள், குளங்கள், அணைகள் யாவும் தமக்கென வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்நீர் நிலைகளின் கரைகளில் அதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மடைக்கல்வெட்டுகள், தூம்புக் கல்வெட்டுகள் என இவை அழைக்கப்படுகின்றன. அரசர்கள் வெட்டுவித்த குளங்களின் படித்துறைகளில் வாழ்வியல் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஏரிகள் தொடர்பான கல்வெட்டு ஆவணங்கள் அவ்வூரின் கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் பாதுகாத்து, பராமரிக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களாகும்.
மேலும் பழங்குடி மக்களின் வாழ்விடப்பகுதிகளில் அவர்களின் குடியிருப்பு கட்டுமானங்களும் இதனுள் அடங்கும். மடங்கள், ஆங்கிலேயர் காலத்திய கட்டிடங்கள், நகரத்தாரின் வீடுகள் ஆகியன குறிப்பிடத்தக்க தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடக் கலைப்பாணியைக் கொண்டுள்ள கட்டுமானங்களாகும்.