முகப்பு வரலாற்றுச் சின்னங்கள் நினைவிடங்கள் காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி
அமைவிடம் | - | காயல்பட்டினம் |
ஊர் | - | காயல்பட்டினம் |
வட்டம் | - | கற்புடையார் பள்ளி வட்டம் |
மாவட்டம் | - | தூத்துக்குடி |
வகை | - | நினைவிடம் |
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | - | கி.பி.843 |
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | - | திருச்செந்தூர், தூத்துக்குடி துறைமுகம், கொற்கை அகழாய்விடம் |
விளக்கம் | - | இன்றைய, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு அருகில் தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது காயல்பட்டினம் என்னும் பேரூர். இவ்வூரின் பழைய பெயர் காயல் என்பதாகும். பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது. கொற்கைக்குத் தெற்கில் காயல்பட்டினம் அமைந்துள்ளது. காயலுக்கு தெற்கில் வீரபாண்டிய பட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பெயரால் (கி.பி.946-966) அமைந்ததாகும். ஏற்கெனவே, முதன்முதலாக கி.பி.633-இல் (ஹிஜ்ரி 12) அரேபிய இசுலாமியர்கள் காயலில் வந்து குடியேறியுள்ளனர். இக்காலத்தில் முதன் முதலாகக் கடற்கரையில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அது கடற்கரை மசூதி என்றே பெயர் பெற்றது. கி.பி.633-640 காலத்தில் இம்மசூதி கட்டப்பட்டிருக்கலாம். கேரளத்துக் கொடுங்களூரிலும் இதே காலத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது. இவ்விரண்டு மசூதிகளுமே இந்தியாவின் தொன்மையான பகுதிகளையும் குறிப்பிடுகின்றன. அரேபியர்களின் இரண்டாவது குடியேற்றம் கி.பி.—இல் (ஹிஜ்ரி 327) எகிப்திலிருந்து வந்த இஸ்லாமியர்களால் ஏற்பட்டது. முகமது நபியின் வழிவந்த நான்கு காலிபாக்களின் வழித்தோன்றல்களே இங்கு வந்து குடியேறினர். கி.பி.1380க்கு பின்னரே ‘காயல்பட்டினம்’ என்னும் பெயர் வழக்கிற்கு வந்தது எனலாம். கி.பி.342-இல் வந்தவர்களால் குத்பா பெரிய பள்ளி என்னும் மசூதி கட்டப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. கருப்புடையார் பள்ளியில் காலத்தால் முந்திய வீரபாண்டியன் காலத்துக் (946-966) கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டில் இவ்வூர் காயல்கரை, காசிர ஊர் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்று பல பெயர்களில் சுட்டப்படுகிறது. |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | திருநெல்வேலி தொல்லியல் கழகம் |
சுருக்கம் | - | காயல்பட்டினம் நெய்னார் தெருவில், பெரிய குத்பா பள்ளி 1200 வருடங்கள் பழமையான பெரிய பள்ளி. கி.பி 843 கட்டப்பட்டது. கட்டியவர் முகம்மது ஹல்ஜி (கி.பி. 815-890) தமிழகத்தின் மிகப்பழமையான பள்ளி இது. கி.பி.1300 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. |