கோயிலின் பெயர் - அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் - பனங்குடி பரமேசுவரர் கோயில்
அமைவிடம் - பனங்குடி, குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை.
ஊர் - பனங்குடி
வட்டம் - குளத்தூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம்/வைணவம்/அம்மன்/முருகன் /கிராமதெய்வம்/சமணம்/பௌத்தம்/இதரவகை) - சைவம்
மூலவர் பெயர் - பரமேசுவரர், அகத்தீசுவரர்
திருவிழாக்கள் - பிரதோஷம், சிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் - கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முத்தரையர்கள்
கல்வெட்டு / செப்பேடு - கருவறையின் வடசுவரில் சோழர் காலக் கல்வெட்டுகளில் பரகேசரிவர்மனின் 14- ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் பனங்குடி பரமேசுவரர் என்றே அழைக்கப்படுகிறார்.
சுவரோவியங்கள் - இல்லை
தலத்தின் சிறப்பு - 1100 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம் - இக்கோயிலை பரமேசுவரர் கோயில் என்றே அழைக்கின்றனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த முத்தரையர்கள் காலத்திய கட்டடக் கலையைச் சேர்ந்த இக்கலைக் கோயில் பிற்காலத்தில் சோழர்களால் புனரமைக்கப்பட்டுள்ளது என்பதனை இங்குள்ள சோழர் காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் - இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் - குடுமியான் மலை, நார்த்தாமலை விசயாலய சோழிச்சுவரம், கேடிலியப்பர் கோயில், சித்தன்னவாசல்
செல்லும் வழி - அன்னவாசலிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் - காலை 6.00 -12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
அருகிலுள்ள பேருந்து நிலையம் - பனங்குடி, அன்னவாசல்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் - புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம் - திருச்சி
தங்கும் வசதி - புதுக்கோட்டை நகர விடுதிகள்
ஒளிப்படம்எடுத்தவர் - American Institute of Indian Studies
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் - American Institute of Indian Studies