கோயிலின் பெயர் - ஆவூர் பெரிய நாயகி மாதா ஆலயம்
வேறு பெயர்கள் - பெரிய நாயகி மாதா தேவாலயம்
அமைவிடம் - பெரிய நாயகி மாதா தேவாலயம், ஆவூர், விராலிமலை ஒன்றியம், புதுக்கோட்டை.
ஊர் - ஆவூர்
வட்டம் - விராலிமலை
மாவட்டம் - புதுக்கோட்டை
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம்/வைணவம்/அம்மன்/முருகன் /கிராமதெய்வம்/சமணம்/பௌத்தம்/இதரவகை) - இதரவகை
மூலவர் பெயர் - பெரிய நாயகி மேரி மாதா
உலாப் படிமம் பெயர் - பெரியநாயகி மாதா
தாயார் / அம்மன் பெயர் - மேரி மாதா
தலமரம் - கிறிஸ்துமஸ் மரம்
ஆகமம் - வேதாகமம்
திருவிழாக்கள் - கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு
தலத்தின் சிறப்பு - 270 ஆண்டுகள் பழமையானது. வீரமாமுனிவரால் கட்டப்பட்டது.
சுருக்கம் - பெரிய நாயகி மாதா ஆலயம் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கிருத்துவப் புனிதத்தலம் ஆகும். இந்த கிருத்துவக் கோயிலானது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. வீரமாமுனிவரால் 1750-இல் இத்திருத்தலம் கட்டப்பட்டது.
கோயிலின் அமைப்பு - சிலுவை வடிவில் உள்ள ஆலயம் 242 அடி நீளம், 28 அடி அகலம் மற்றும் 28 அடி உயரம் 8 தூண்கள் உடைய குவிமாடம் பிரமாண்ட உயரம் உடைய முகப்பு கொண்டதாய் இந்த தேவாலயம் விளங்குகின்றது.
பாதுகாக்கும் நிறுவனம் - புதுக்கோட்டை உயர் மறை மாவட்ட திருச்சபை
செல்லும் வழி - இந்த ஆலயமானது திருச்சியிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கீரனுாாிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் விராலிமலையிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் - காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5:30 மணி வரை
அருகிலுள்ள பேருந்து நிலையம் - ஆவூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் - புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம் - திருச்சி
தங்கும் வசதி - புதுக்கோட்டை நகர விடுதிகள்
ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்