குட்டைக்காடு

அமைவிடம் - குட்டைக்காடு
ஊர் - குட்டைக்காடு
வட்டம் - வெள்ளலூர்
மாவட்டம் - கோயம்புத்தூர்
வகை - கற்குவை/கற்குவியல்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்குவை/கற்குவியல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2019
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கற்குவை எனும் ஈமச்சின்னம், வெள்ளலுார் அருகே குட்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கற்குவை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் முறைகளை விளக்கும் பெருங்கற்கால நினைவு சின்னங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நினைவிடத்தை, தற்சமயம் இந்திய தொல்லியல் துறை கண்டறிந்து, பாதுகாத்து வருவதுடன், சுற்றிலும் மதில் சுவர் கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. வெள்ளலுார் என்பது பழங்காலத்தில், 'அன்னதான சிவபுரி' என்ற பெயரை கொண்ட ஊர். தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்களில், 70 சதவீதம், வெள்ளலுாரில் இருந்தே கிடைக்கப் பெற்றதாக, ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களை புதைத்த இடத்தில், கற்களை கொண்டு சிறிய குன்றுபோல் அமைக்கப்பட்டது. இதுவே, கற்குவியல் அல்லது கற்குவை என அழைக்கப்படுகிறது. இதுபோன்று கற்களை வைத்து ஈமச்சின்னங்களை உருவாக்கிய காலத்தையே பெருங்கற்காலம் என்கிறோம்.

ஒளிப்படம்எடுத்தவர் - மத்தியத் தொல்லியல் துறை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் ஒரு தொல்லியல் களமாகும். வெள்ளலூரில் உள்ள குட்டைக்காடு என்னும் ஊரில் கற்குவை அல்லது கற்குவியல் என்ற பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னம் கண்டறியப்பட்டுள்ளது. கற்குவை என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை புதைத்தவிடத்தில் கற்களை குவித்து வைத்தலாகும். இக்கற்குவியல் கற்குவை என்றழைக்கப்படும்.