அமைவிடம் | - | செல்லியம்மன்கொட்டாய்-செல்லியம்மன் கோவில் வளாகம் |
ஊர் | - | செல்லியம்மன்கொட்டாய் |
வட்டம் | - | ஊத்தங்கரை |
மாவட்டம் | - | திருப்பத்தூர் |
வகை | - | புதிய கற்காலக் குகை |
கிடைத்த தொல்பொருட்கள் | - | புதியகற்கால குகை |
பண்பாட்டுக் காலம் | - | புதிய கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2018 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர் மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், கிருஷ்ணகுமார் |
விளக்கம் | - | திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் குகைகள் கண்டறியப்பட்டன. அங்குள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்தில் புதிய கற்கால கற் கோடாரிகள் வழிபாட்டில் இருப்பதும், அங்குள்ள தம்புரான் என்ற சிறிய குன்றில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் கண்டறியப்பட்டது. தம்பிரான் என்றால் தலைவன், இறைவன் என்று பொருள்படும். இக்குகை ஏறக்குறைய 10 பேர் வாழ ஏற்றதாக உள்ளது. குகையின் ஒருபுறம் மூன்று சுனைகள் காணப்படுகின்றன. அவற்றில் கோடைக் காலங்களிலும் வற்றாமல் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. குகையின் உட்புறத்தில் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேற்புறத்தில் 5 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று இருப்பிடத்தைக் குறிப்பதாகவோ அல்லது அக்கால மக்கள் பயன்படுத்திய விளக்கினைக் குறிப்பதாகவோ இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. ஒரு மனித உருவம் வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் ஏந்திய நிலையில் வரையப்பட்டுள்ளது. இது வேட்டை நிகழ்வைக் குறிப்பதாக உள்ளது. மேலும் செல்லியம்மன் கோவிலுக்கு பின் புறம் உள்ள குகைக்குன்று என்ற சிறிய குன்றில் 6-க்கும் மேற்பட்ட இயற்கையான குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளை அக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்குச் சான்றாக குகை முகப்பில் வெள்ளை நிறத்தில் பறவை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர் மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், கிருஷ்ணகுமார் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | கெஜல்நாயக்கன்பட்டியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் குகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள செல்லியம்மன் கோயில் வளாகத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரிகள் வழிபாட்டில் உள்ளன. செல்லியம்மன் கோயிலுக்கு எதிரே உள்ள “தம்புரான் குன்று“ என்றழைக்கப்படும் சிறிய குன்றில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த குகை ஒன்று காணப்படுகிறது. இக்குகையானது 10 தங்கக் கூடியது. இக்குகையில் ஒருபுறம் மூன்று சுனைகள் காணப்படுகின்றன. குகையின் உட்புறத்தில் வெள்ளை நிற ஓவியங்கள் காணப்படுகின்றன. |