கணவாய்பட்டி

அமைவிடம் - கணவாய்பட்டி
ஊர் - கணவாய்பட்டி
வட்டம் - உசிலம்பட்டி
மாவட்டம் - மதுரை
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2019
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

திரு.இராஜவேலு

விளக்கம் -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள கணவாய்பட்டி என்னும் ஊரில் கற்திட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்களுள் ஒன்றான கற்திட்டை பூமிக்கு மேலே கற்பலகைகளால் அமைக்கப்படுவதாகும். இவை மலையடிவாரங்களில் உள்ள ஊர்களிலும், மலைக்கிராமங்களிலும் காணப்படுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.இராஜவேலு
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள கிராமம்தான் கணவாய்பட்டி. இங்கு கற்திட்டை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கற்திட்டை என்பது பெருங்கற்காலத்தில் பெரிய கற்களைக் கொண்டு இறந்தவர்களுக்கு அமைக்கப்படும் ஈமச்சின்னங்களுள் ஒன்றாகும். கற்திட்டை நாற்புறமும் பலகைக் கற்களைக் கொண்டு அறை போன்று அமைக்கப்பட்டு, மேற்பகுதியில் பலகைக் கல் கொண்டு மூடப்பட்டிருக்கும்.