வேம்பூர்

அமைவிடம் - வேம்பூர்
ஊர் - வேம்பூர்
வட்டம் - ஆண்டிப்பட்டி
மாவட்டம் - தேனி
வகை - குத்துக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2017
விளக்கம் -

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி வட்டத்தில் வேம்பூர் என்னும் கிராமத்தில் குத்துக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. குத்துக்கல் என்பது பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றாகும். இக்குத்துக்கற்கள் இறந்தவரின் நினைவாக அவருடைய இரத்த உறவுகளால் நடப்பட்டு வழிபாடு செய்யப்படும். செயற்கரிய செய்தோருக்கே இத்தகைய நினைவுக்கற்கள் எடுப்பிப்பது மரபு. குத்துக்கல்லின் மேம்பட்ட நிலையே நடுகல்லாகும்.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த வேம்பூர் என்னும் ஊரில் குத்துக்கல் கண்டறியப்பட்டுள்ளது. குத்துக்கல் என்பது 2 அடி அகலமும், 12 முதல் 15 அடி உயரத்துடன் அடிப்பகுதி பெருத்து, நுனிப்பகுதி சிறுத்து செங்குத்துக் கல்லாக இருக்கும். பெரிய பலகை கல் போன்ற இந்த வகை குத்துக்கல் தமிழ்நாட்டில் பரவலாக கிடைக்கிறது. நீண்ட உயரமான கல் நெடுங்கல் என்றழைக்கப்படும். குத்துக்கல்லின் வளர்ச்சி கட்ட நிலையே நடுகல் எனப்படும்.