சாமந்தமலை

அமைவிடம் - சாமந்தமலை
ஊர் - சாமந்தமலை
வட்டம் - வேப்பனபள்ளி
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - குத்துக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2019
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு குழு

விளக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி வட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளியை அடுத்த சாமந்த மலை கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள பாரத கோயில் அருகே ராஜாமணி என்பவருக்கு சொந்தமான வேடங்கொல்லை என்ற விளை நிலத்தில்2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பெரிய பெருங்கற்கால அரிய வகை குத்துக்கல் கண்டறியப்பட்டுள்ளது. சாமந்தமலையில் கண்டறியப்பட்ட குத்துக்கல் சுமார் ஒன்பதரை அடி அகலமுமம், 11 அடி உயரமும், ஓர் அடி கனமும் உள்ள கல் பலகையாகும். இந்த கல் பலகையில் விசிறிப்பாறையாக உருவம் வடிக்க முயற்சி செய்துள்ளதைக் காண முடிகிறது.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

குத்துக்கல் என்பது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால மக்கள், இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச் சின்னங்களில் ஒன்று. பொதுவாக குத்துக்கல் என்பது 2 அடி அகலமும், 12 முதல் 15 அடி உயரத்துடன் அடிப்பகுதி பெருத்து, நுனிப்பகுதி சிறுத்து செங்குத்துக் கல்லாக இருக்கும். பெரிய பலகை கல் போன்ற இந்த வகை குத்துக்கல் தமிழ்நாட்டில் பரவலாக கிடைக்கிறது. நீண்ட உயரமான கல் நெடுங்கல் என்றழைக்கப்படும். சாமந்தமலையில் கிடைத்துள்ள குத்துக்கல் உருவத்தில் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. விசிறிக்கல்லாக செய்வதற்கு முயன்றதாகத் தெரிகிறது. எனினும் அளவில் இந்த குத்துக்கல் பெரியதாகும்.