ஜகதாபி

அமைவிடம் - ஜகதாபி
ஊர் - ஜகதாபி
வட்டம் - தாந்தோணி
மாவட்டம் - கரூர்
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கரூர் மாவட்டத்தில் தாந்தோணி வட்டத்தில் அமைந்துள்ள ஜகதாபி என்னும் ஊரில் குத்துக்கல் ஒன்று காணப்படுகின்றது. பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான நெடுங்கல் இறந்தவர்களை புதைவிடத்தின் மேல் நடப்படும் கல்லாகும். இந்த வகை நினைவுக்கல் சுமார் 3 அடியிலிருந்து 30 அடி உயரம் வரை காணப்படும். இங்கு காணப்படும் நெடுங்கல் சுமார் 10 அடி உயரத்தில் உள்ளது. நீர் நிலையில் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பெருங்கற்கால பண்பாட்டு மரபில் ஈமச்சின்னங்கள் நீர் நிலைகளுக்கு அருகில் வைக்கப்படுவது மரபு. ஏனெனில் நீத்தார் வழிபாடு நீர் சடங்குகளோடு தொடர்புடையது. அவ்வகையில் ஜகதாபி குத்துக்கல் அவ்வூரின் கண்மாய் கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

கரூர் மாவட்டத்தில் தாந்தோணி வட்டத்தில் அமைந்துள்ள ஜகதாபி என்னும் ஊரில் காணப்படும் குத்துக்கல் கண்மாய்க் கரையில் அமைக்கப்பட்டுள்ளது. கூரிய முனையை உடையதாக செதுக்கப்பட்டுள்ள இந்த நெடுங்கல் சுமார் 10 அடி உயரமுடையது.