பாசூர்

அமைவிடம் - பாசூர்
ஊர் - பாசூர்
வட்டம் - கொடுமுடி
மாவட்டம் - ஈரோடு
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பாசூர் நெடுங்கற்கள் அவ்வூரின் ஈமக்காட்டில் காணப்படுகின்றன. இங்கு இரண்டு நெடுங்கற்கள் உள்ளன. இரண்டு நெடுங்கற்களும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இரண்டும் ஏறக்குறைய ஒரே உயரத்தை உடையவை. இதில் ஒரு நெடுங்கல்லின் மேற்பகுதி கூர்முனையாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவ்வாறு அமைக்கப்படுதல் மரபு. பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் செயற்கரியன செய்து உயிர் நீத்தோரின் பெருமையைக் கூறுவதாக உயரமாக அமைக்கப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் உள்ள பாசூர் என்னும் கிராமத்தில் இரண்டு நெடுங்கற்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு நெடுங்கற்களும் அருகருகே அமைந்துள்ளன.