நரசிங்கம்பட்டி

அமைவிடம் - நரசிங்கம்பட்டி
ஊர் - நரசிங்கம்பட்டி
வட்டம் - மேலூர்
மாவட்டம் - மதுரை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

இறந்தோரை முறையாக அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட ஈமக்காடு நரசிங்கம்பட்டி கிராமத்தினருகில், பெருமாள் மலை அடிவாரத்தில் அடர்ந்த புதர்க்காட்டுக்குள் காணக்கிடைக்கிறது. இந்த ஈமக்காடு சுமார் 5,000 ஆண்டுகள் பழைமையானது என்றும், முதுமக்கள் தாழியைப் பயன்படுத்துவதற்கும் முந்தைய நாகரிகம் என்றும் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். சப்பட்டையான நீளவடிவிலான நடுகற்கள் பலவற்றை இப்போதும் இங்கு பார்க்கலாம். அத்துடன், இறந்தவர்களைப் புதைத்த அடையாளமாக, கற்களை அடுக்கி வைத்திருப்பதையும் அங்கங்கே காணலாம். இக்கல்லறைகள் கி.மு 10,000 ஆண்டுக்கும் கி.மு 300-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனத் தொல்லியலாளர்கள் சொல்கின்றனர்.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேலூர் செல்லும் வழியில், மதுரையிலிருந்து 15 கி.மீ தொலைவில், அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் கிராமங்களுக்கு இடையே அழகுற அமைந்திருக்கும் கிராமம் நரசிங்கம்பட்டி. வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியான பெருமாள்மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாங்கான கிராமமிது. பழையூர் என்பது இக்கிராமத்தின் பழைய பெயர் என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள். இவ்வூரில் காணப்படும் ஈமக்காட்டில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை. இவை சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றது.