அமைவிடம் | - | கீழச்சொக்கையா கோயில் |
ஊர் | - | முந்தல் |
வட்டம் | - | போடிநாயக்கனூர் |
மாவட்டம் | - | தேனி |
வகை | - | கற்திட்டை |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்திட்டை |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2018 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கனகராஜ் |
விளக்கம் | - | தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்தில் உள்ள முந்தல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள கீழச்சொக்கையா கோயில் அருகே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வூரில் கற்திட்டைகள் சில காணப்படுகின்றன. பல கற்திட்டைகள் சிதிலமடைந்துவிட்டன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள்ளது. இந்த பகுதியில், 9 கல்திட்டைகள் உள்ளன. சிறிய அளவிலான கல் வீடு போன்ற அமைப்பில் காணப்படும் கல்லறை அமைப்புக்கு கல்திட்டை என்று பெயர். இதனை கற்திட்டை, ஈமப்புதைக்குழி என்றும் அழைப்பர். பெரிய கற்களைக் கொண்டு நீத்தோர் நினைவாக அமைக்கப்பட்டதால், இவ்வமைப்பு பெருங்கற்படை காலம் என்று அழைக்கப்படுகிறது. |