அமைவிடம் | - | சிங்காரிபாளையம் சங்கிலிகருப்பண்ணசாமி கோயில் |
ஊர் | - | சிங்காரிபாளையம் |
வட்டம் | - | தாராபுரம் |
மாவட்டம் | - | திருப்பூர் |
வகை | - | நெடுங்கல் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | நெடுங்கல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
விளக்கம் | - | பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள சிங்காரிப்பாளையம் என்னும் ஊரில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகையான நெடுங்கற்கள் கொங்குநாட்டில் பரவலாகக் காணப்படுகின்றன. குடியின் தலைவன் அல்லது வீரன் வீரமரணம் அடைந்தால் இத்தகைய நெடுங்கல் எடுப்பிக்கும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தது. இந்நெடுங்கல் வகையானது நீண்ட உயரமுடையதாக காணப்படுகிறது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | குண்டடம் அருகில் உள்ள சிங்காரிப்பாளையம் என்னும் ஊரில், பெருங்கற்கால ஈமச்சின்னமான நெடுங்கற்கள், சங்கிலி கருப்பண்ண சாமி என்ற பெயரில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது . கல்வட்டங்கள் கலைந்து காணப்படுகிறது . |