கங்கலேரி

அமைவிடம் - கங்கலேரி
ஊர் - கங்கலேரி
வட்டம் - கிருஷ்ணகிரி
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில் வைத்தோ புதைத்து, அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது. நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு துளை அமைப்புடன் காணப்படும். இந்த அமைப்பை இடுதுளை என்பர். கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி என்னும் இடத்தில் மிகவும் பிரம்மாண்டமான மற்றும் பழமையான கற்திட்டைகள் இடுதுளையுடன் காணப்படுகின்றன. இதன் மேற்பலகைக் கற்கள் சுமார் ஐந்து டன்னுக்கும் மேல் எடையுள்ளவை. இங்கு 400க்கும் மேற்பட்ட கற்திட்டைகளுடன் கூடிய இடுகாடு இருந்து இருக்கிறது, ஆனால் தற்போது அவை அனைத்தும் உடைக்கப்பட்டு விட்டன. தற்போது உள்ள இரண்டு கற்திட்டைகளில் ஒரு கற்திட்டை மட்டுமே நல்ல நிலையில் உள்ளது . மற்றொன்று சிதைக்கப்பட்டு விட்டது.

ஒளிப்படம்எடுத்தவர் - திருமதி. சக்திபிரகாஷ்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி என்னும் இடத்தில் மிகவும் பிரம்மாண்டமான மற்றும் பழமையான கற்திட்டைகள் இடுதுளையுடன் காணப்படுகின்றன. இதன் மேற்பலகைக் கற்கள் சுமார் ஐந்து டன்னுக்கும் மேல் எடையுள்ளவை. கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எலும்புகளை பேழையில் வைத்தோ புதைத்து, அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது. நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு துளை அமைப்புடன் காணப்படும். இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.