உழக்குடி

அமைவிடம் - உழக்குடி
ஊர் - உழக்குடி
வட்டம் - கருங்குளம்
மாவட்டம் - தூத்துக்குடி
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - கல் சக்கரங்கள், இரும்பு உருக்கு உலை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2020
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை

விளக்கம் -

தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் அருகே உழக்குடி கிராமம் உள்ளது. உழவர் குடி என்ற பெயர் மருவி உழக்குடி என்றானது. இப்பகுதியில் கல் சக்கரங்கள், இரும்பு உருக்கு உலை போன்ற பல வித பொருள்கள் கிடைத்துள்ளன. நெடுகற்கள் இங்கு கண்டறியப்பட்டன. இவ்வித கற்கள் பிரான்சு ஸ்வீடன், அயர்லாந்து, தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்துள்ளன. நெடுங்கற்கள் ஒரு சில இடங்களில் கிடைக்கும். அதில் உழக்குடியும் ஒன்றாகும். உழக்குடி தொல்லியல் களமான ஆதிச்சநல்லூர், சிவகளை , கொற்கை மற்றும் தாமிரபரணி படுகையில் உள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்