அடுக்கம்

அமைவிடம் - அடுக்கம்
ஊர் - அடுக்கம்
வட்டம் - கொடைக்கானல்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - பெருங்கற்காலம்
கிடைத்த தொல்பொருட்கள் - பெருங்கற்காலம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.1928
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அடுக்கம் பகுதியில் காணப்படும் தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் தோரணவாயில் போன்ற கல் அமைப்பு மூதாதையரின் வழிபாட்டுக்குரிய இடமாக அறியப்படுகிறது. நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள கற்பலகைகளில் குறியீடுகள் காணப்படுகின்றன. பலகைக் கல்லைச் சுற்றி கட்டம் கட்டமாக வெட்டப்பட்டுள்ளது. தாயம் விளையாட்டுக் கருவியாகவும் தோன்றவில்லை. இக்கட்டங்கள் வெட்டப்பட்ட பலகைக் கல் முன்னோர்கள்களால் தம் இனத்திற்கான வளமைக்காக செய்யப்பட்ட வளமைச்சடங்குக்கான மந்திரக்கல்லாய் இருக்கலாம் என கருத இடமுண்டு.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

கொடைக்கானல் மலையில் காணப்படும் அடுக்கம் என்னும் வாழ்விடப்பகுதி ஓர் தொல்லியல் களமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அடுக்கத்தில் தொல்லியல் எச்சங்களும், வரலாற்று எச்சங்களும் களஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு நிலத்தில் காணப்படும் கற்பலகைகளில் பலவிதமான குறியீடுகள் காணப்படுகின்றன. இவை முன்னோர்களின் மந்திரச் சடங்குகளைக் குறித்தனவா என்பது ஆய்வுக்குரியது.