அமைவிடம் | - | கணேசபுரம் |
ஊர் | - | கணேசபுரம் |
வட்டம் | - | கொடைக்கானல் |
மாவட்டம் | - | திண்டுக்கல் |
வகை | - | நெடுங்கல்/நடுகல் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | நெடுங்கல்/நடுகல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.1928 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் கணேசபுரம் என்றொரு வாழ்விடப்பகுதி பச்சைப்பசேலென்று காட்சியளிக்கிறது. கண்ணுக்கு விருந்தாகவும், இனிமையாகவும் அமைந்துள்ள இப்பகுதியில் நெடுங்கல் ஒன்று சிறிய கோயில் ஒன்றில் வழிபாட்டில் உள்ளது. நெடுங்கல் 7 அடி உயரமுடையது. இந்நெடுங்கல்லில் பிற்காலத்தில் வீரனொருவன் உருவம் வெட்டப்பட்டுள்ளது. வீரன் இரண்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளான். சிறிய அறை போன்ற கருவறையின் நடுவே இந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ள நெடுங்கல் வழிபாட்டில் உள்ளது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையின் மருங்கே கணேசபுரம் அமைந்துள்ளது. இங்கு சிறிய கோயில் ஒன்றில் நெடுங்கல் வழிபாட்டில் உள்ளது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல்லில் பிற்காலத்தில் வீரன் ஒருவன் உருவம் வரையப்பட்டுள்ளது. நெடுங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள வீரன் காக்கும் தெய்வமாக வழிபடப்பெறுகிறான். |