அமைவிடம் | - | பேத்துப்பாறை |
ஊர் | - | பேத்துப்பாறை |
வட்டம் | - | கொடைக்கானல் |
மாவட்டம் | - | திண்டுக்கல் |
வகை | - | கற்திட்டை |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்திட்டை |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.1928 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள பேத்துப்பாறை என்னும் பகுதியில் கற்திட்டைகள் காணப்படுகின்றன. அவை 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டவை. பல கற்திட்டைகள் தற்போது அழிந்துபட்டுப் போயின. பேத்துப்பாறை கற்திட்டைகள் தனித்துவமானவை. மூன்றுபுறமும் பலகைக் கல்லை நிற்க வைத்து மேற்பகுதியில் மற்றொரு பலகைக் கல்லைக் கொண்டு மூடுவது வழக்கம். ஆனால் இங்கு மேற்பகுதியில் மூடப்பட்டுள்ள பலகைக் கல் குடை போன்ற குவிந்து குடைக்கல்லாக காணப்படுவது தனிச்சிறப்பு. இத்தகு குடைக்கல் ஈமச்சின்னம் அதிகமாக கேரளப்பகுதியிலேயே காணப்படுகிறது. மலைவாழ்ப் பகுதிகளில் இத்தகையதொரு தனித்துவமான பெருங்கற்கால ஈமச்சின்னம் விளங்குதல் அப்பண்பாட்டின் முகிழ்வைக் காட்டுகிறது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | கொடைக்கானல் மலையில் காணப்படும் பேத்துப்பாறை என்னும் வாழ்விடப்பகுதி ஓர் தொல்லியல் களமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பேத்துப்பாறையில் தொல்லியல் எச்சங்களும், வரலாற்று எச்சங்களும் களஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு நிலத்தில் காணப்படும் கற்திட்டைகள் குடைக்கல்லைப் போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கற்கிடைகள் தற்போது காணப்படுகின்றன. பல ஈமச்சின்னங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. |