பேத்துப்பாறை

அமைவிடம் - பேத்துப்பாறை
ஊர் - பேத்துப்பாறை
வட்டம் - கொடைக்கானல்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - கற்கிடை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்கிடை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.1928
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பேத்துப்பாறை பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் மத்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட மரபுச்சின்னமாக விளங்குகிறது. பேத்துப்பாறையில் உள்ள கற்கிடைகள் தனித்துவமானவை. மூன்றுபுறங்களிலும் ஊன்றப்படும் பலகைக் கற்கள் இங்கு இரண்டிரண்டாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்புறத்தில் மூடுபலகைக் கல் தொப்பிக்கல்லைப் போன்று காட்சியளிக்கிறது. இடுதுளைகள் காணப்படவில்லை. நால்புறமும் மூடிய நிலையில் கற்திட்டைகள் இல்லை. ஒருவேளை சிதைந்திருக்கலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

பேத்துப்பாறையில் காணப்படும் கற்கிடைகள் சிதிலமடைந்துள்ளன. அவை அறை போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளன. நிலத்திற்கு மேலே காணப்படும் இக்கற்திட்டைகளின் மேற்புறத்தில் வைக்கப்படும் மூடுகல் பலமடங்கு எடையுள்ளவையாகத் தெரிகின்றது.