பூம்பாறை

அமைவிடம் - பூம்பாறை
ஊர் - பூம்பாறை
வட்டம் - கொடைக்கானல்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - நடுகல்/குத்துக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நடுகல்/குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.1928
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பூம்பாறை என்பது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலை கிராமமாகும். பழனி மலைகளின் இதயம் போன்று இக்கிராமம் அமைந்துள்ளது. இது 1,920 மீட்டர் (6,300 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பூம்பாறை கிராமத்தில் உள்ள ஒரு தெருவின் மையத்தில் ஒரு குத்துக்கல் அமைந்துள்ளது. இக்குத்துகல்லின் உயரம் 6 அடி ஆகும். மேற்பகுதி கூர்மையாக வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மேல்முனை கூராக்குதல் நடுகல்லின் ஒரு மரபாக இருந்து வந்துள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

கொடைக்கானல் மலையில் உள்ள பூம்பாறையில் பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான குத்துக்கற்கள் இரண்டு காணப்படுகின்றன. அதில் ஒன்றான இக்குத்துக்கல் நெடுங்கல் என்று சொல்லுமளவிற்கு உயரமானதாக இல்லை. எனினும் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளமையால் காலத்தால் முந்தியதாகக் கருத இடமுண்டு.