அமைவிடம் | - | பெரியூர் பூம்பாறை |
ஊர் | - | பெரியூர் பூம்பாறை |
வட்டம் | - | கொடைக்கானல் |
மாவட்டம் | - | திண்டுக்கல் |
வகை | - | நெடுங்கல் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | நெடுங்கல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.1928 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள பூம்பாறையில் பெரியூர் என்ற பகுதியில் வரலாற்று எச்சங்கள் காணப்படுகின்றன. சிதிலமடைந்த தூண்கள் ஆங்காங்கே கீழே கிடக்கின்றன. தூண்கள் அனைத்தும் சிற்பத்துடன் விளங்குகின்றன. ஆடல் மகளிர், பெண் புலியைக் கொல்லும் காட்சி, யானை ஓடும் காட்சி, அரசர், அடியவர் ஆகிய புடைப்புச் சிற்பங்கள் தூண்களில் விளங்குகின்றன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | பூம்பாறையிலுள்ள பெரியூர் என்னுமிடத்தில் சிதிலமடைந்த கோயில் தூண்கள் காணப்படுகின்றன. இக்கோயில் விசயநகர-நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். உடைந்துள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. |