பாறைமேடுபகுதி

அமைவிடம் - பாறைமேடுபகுதி
ஊர் - சின்ன அல்லாபுரம்
வட்டம் - வேலூர்
மாவட்டம் - வேலூர்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அல்லாபுரத்தை அடுத்துள்ள பாறைமேடு பகுதியில் கற்திட்டை ஒன்று காணப்படுகின்றது. வேலூர் நகரத்தில் கிடைத்துள்ள இரண்டு ஈமச்சின்னங்களுள் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பெருங்கற்கால மக்கள் தங்களின் பண்பாட்டில் மிக முக்கியமான இறந்தவர்களுக்கு ஈமச்சின்னம் அமைத்தலை இன்றியமையாததாகக் கருதினார்கள். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொடுமணல், பொருந்தல் ஆகிய அகழாய்வுகள் இது போன்ற கல்திட்டைகளில் மீது செய்யப்பட்டவை ஆகும். மிக முக்கியமாக வேலூரில் இது போன்று கல்திட்டைகள் அதிகமான எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒளிப்படம்எடுத்தவர் - மத்தியத் தொல்லியல் துறை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட சின்ன அல்லாபுரம் அடுத்துள்ள பாறைமேடு பகுதி ஆகிய இரு இடங்களிலும் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமான ஈமச்சின்னம் கேட்பாறின்றி கிடக்கின்றன.