நைனானூர்

அமைவிடம் - நைனானூர்
ஊர் - சூரப்பள்ளி நைனானூர்
வட்டம் - நங்கவள்ளி
மாவட்டம் - சேலம்
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2018
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

சேலம் வரலாற்றுத் தேடல் குழு

விளக்கம் -

சூரப்பள்ளி ஊராட்சி சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னங்களுள் ஒன்றான நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருங்கற்கால ஈமச் சின்னமாகத் திகழும் இந்த நடுகல் 3,000 ஆண்டு பழைமை வாய்ந்தது. தற்போது இந்த நடுகல் 10 அடி உயரத்திலும், 6 அடி அகலத்திலும் இருக்கிறது. ஆனால், இந்தக் கல் 15 முதல் 20 அடி உயரம் இருந்திருக்கலாம். காலப்போக்கில் இது உடைந்துவிட்டது. கல் உடைந்ததற்கான அடையாளங்கள் இருக்கிறது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த நடுகல் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் நன்னாளில் மூதாதையர் வணக்கமாக வழிபடப்பட்டு வருகின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் - சேலம் வரலாற்றுத் தேடல் குழு
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

சேலம் மாவட்டம், நங்கவள்ள வட்டத்தில் உள்ள சூரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள நைனானூர் என்னுமிடத்தில் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றாக நடுகல் கருதப்படுகிறது. நட்டபோலும் நடா நெடுங்கல் என்று சங்க இலக்கியம் குறிப்பிடும் இவ்வகை நடுகற்கள் தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்றன. இருப்பினும் மலையடிவாரங்களிலும், மலைப்பகுதிகளிலும் நாட்டப்பட்ட நடுகற்கள் அளவில் பெரியனவாகவும், உயரமானதாகவும் காட்சியளிக்கின்றன. எழுத்துடை நடுகல்லுக்கு முன்னோடியாக இவ்வகை நடுகற்களை கருத வாய்ப்புண்டு.