சாளூர்

அமைவிடம் - சாளூர்
ஊர் - சாளூர்
வட்டம் - போளூர்
மாவட்டம் - திருவண்ணாமலை
வகை - குத்துக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
விளக்கம் -

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். 200 மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும் கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன. ஜவ்வாதுமலை அருகே உள்ள சாளுர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக் கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. பெருங்கற்காலத்தில் செயற்கரியன செய்து உயிர் நீத்தவர்களை புதைத்து, அவ்விடத்தில் நினைவுச்சின்னம் ஒன்றை கல்லால் அமைப்பது தொல்மரபு. அத்தகு ஈமச்சின்னங்களுள் நடுகல் குறிப்பிடத்தக்கது. இனக்குழுத் தலைவன் அல்லது ஊரைக்காத்த வீரன் உயிரிழந்தால், அவர்களை புதைத்த குழியின் மீது குத்துக்கல் நடும் வழக்கம் இருந்துள்ளது. இந்த குத்துக்கல் யானைக் கட்டி கல் என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

ஜவ்வாது மலைக்கு அருகே உள்ள சாளூர் கிராமத்தில் குத்துக்கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் புதைவிடத்தில் ஈமச்சின்னமாக அமைக்கப்படும் இவ்வகை குத்துக்கல் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது.