காளப்பட்டி

அமைவிடம் - காளப்பட்டி
ஊர் - காளப்பட்டி
வட்டம் - கோயம்புத்தூர்
மாவட்டம் - கோயம்புத்தூர்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2018
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

கோவை பி.எஸ்.சி. கல்லூரி

விளக்கம் -

கற்திட்டை ஆங்கிலத்தில் “Dolmen” என்று அழைக்கப்படுகின்றது. இது மேசை போன்று காணப்படுகின்றது. கற்பலகைகளால் இது உருவாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் செதுக்கப்படாத கற்பாறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நான்கு புறமும் ஒவ்வொன்றாக நான்கு கற்பலகைகள் செங்குத்தாக நிறுத்தப்பட்டு அவற்றின் மீது ஒரு கற்பலகை மூடு கல்லாக வைக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு கற்திட்டை கோவைக்கு அருகிலுள்ள காளப்பட்டி என்னும் ஊரில் கண்டறியப்பட்டுள்ளது. பெருங்கற்காலத்தில் ஈமச்சின்னங்கள் அமைப்பது என்பது இறந்தவர் அனைவருக்கும் அன்று. செயற்கரியன செய்த பெரும் வீரர்களுக்கும், குடித் தலைவர்களுக்கும், சீறூர் மன்னர்களுக்கும் இத்தகைய நினைவுச்சின்னங்கள் எடுப்பிக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்ற இத்தகு பெருங்கற்கால சின்னங்கள் அப்பகுதிகளில் விளங்கிய வீரத்தன்மையை நிலைநாட்டி நிற்கிறது எனலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் - பேராசிரியர் ச.இரவி
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கோவை காளப்பட்டிப் பகுதியில் வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு மேற்பரப்பாய்வுகள் மேற்கொண்டபோது பல மட்கலச் சில்லுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை கொங்கு நாட்டிற்கேயுரிய வண்ணம் பூசப்பட்ட வரிக்கோடுகளுடைய சிவப்பு மற்றும் சிவப்பு, கருப்பு மட்கலங்களும் கண்டறியப்பட்டுள்ளன. கருப்பெருமான் குட்டையின் தென்கிழக்குப் பகுதியில் செக்காந்தோட்டம் என்றழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தாழிகள் பல கிடைத்திருக்கின்றன.