அமைவிடம் | - | நீலம்பூர்-மேய்ச்சல் நிலம் |
ஊர் | - | நீலம்பூர் |
வட்டம் | - | உடுமலைப்பேட்டை |
மாவட்டம் | - | திருப்பூர் |
வகை | - | கற்திட்டை |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்திட்டை |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | உடுமலை ஜி.வி.ஜி.விசாலாட்சி கல்லூரி |
விளக்கம் | - | இறந்தவர்களை அடையாளப்படுத்தும் விதமாக இந்த கல்திட்டை உள்ளது. மேலும் நமது முன்னோர்களின் நடுகல் வழிபாட்டை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கல்திட்டைக்குள் 3 சிறிய அளவிலான நடுகற்கள் உள்ளன. அதன்படி இந்த பகுதியில் இனக்குழுக்களின் பெரு வீரனாகவும், படைகளை வழிநடத்திச்செல்லும் போர் வீரர்களில் சிலரும் என ஒன்றுக்கும் மேற்பட்டோர் இந்த இடத்தில் இறந்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி இறந்தவர்கள் குறைந்தது 3 பேர் அல்லது 30 பேராகவும் இருக்கலாம். இந்த கல்திட்டைக்கு கிழக்குப்பகுதியிலுள்ள கண்ணாடிப்புதூரில் பழமையான கல்வெட்டுகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அவை அரசின் ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர பழமையான பல வரலாற்று சான்றுகளை கொண்டுள்ள கண்ணாடிப்புத்தூர், வடபூதிநத்தம், கொழுமம், கல்லாபுரம் போன்ற ஊர்கள் இந்த நீலம்பூர் கல் திட்டையின் வழித்தடத்தில் அமைந்திருப்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. இந்த கல்திட்டையானது 2½ அடி உயரத்தில் முதல் நடுகல் கல் திட்டை வடிவில் காணப்படுகிறது. அதாவது மூன்று பக்கங்களிலும் பலகைக்கல்லை வைத்து மேலே ஒரு பெரிய பலகைக் கல்லை வைத்து மூடிய நிலையில் காணப்படுகிறது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | உடுமலை ஜி.வி.ஜி.விசாலாட்சி கல்லூரி |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
சுருக்கம் | - | பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் அழிந்து வரும் நிலையில் நீலம்பூரிலுள்ள இந்த கற்திட்டையானது முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கற்திட்டை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. பெருங்கற்காலத்தில் ஈமச்சின்னங்கள் வைத்ததைத் தொடர்ந்து பிற்காலத்திலும் இந்த மரபு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. |