அமைவிடம் | - | குன்னங்குடிபட்டி |
ஊர் | - | குன்னங்குடிபட்டி |
வட்டம் | - | மேலூர் |
மாவட்டம் | - | மதுரை |
வகை | - | கற்திட்டை |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்திட்டை, கல்வட்டம் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2018 |
விளக்கம் | - | மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குன்னங்குடிபட்டியில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் கி.மு. 5-ஆம் நுாற்றாண்டு காலத்து கல்திட்டைகள் உள்ளன. இதைச் சுற்றிலும் கல் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இவை. இதைத் போரில் இறந்த வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகல் மற்றும் வீரனோடு அவன் மனைவியும் உடன்கட்டை ஏறியதை நினைவு படுத்தும் மாசதி கல்லும் காணப்படுகின்றது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தை கிராம மக்கள் 'குரங்கணி' என்று அழைக்கின்றனர். பொஆ.மு.1000 முதல் பொ.ஆ. 500-ஆம் ஆண்டுகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்த எச்சங்களும் காணக்கிடக்கின்றன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
சுருக்கம் | - | குன்னங்குடிபட்டி கற்திட்டை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது. காலத்தால் முந்தியது. கற்திட்டையைச் சுற்றிலும் கல்வட்டம் காணப்படுகின்றது. அதிக எண்ணிக்கை இங்கு கற்திட்டைகளும், கல்வட்டங்களும் இருந்திருக்க வேண்டும். ஆனால் காலவோட்டத்தில் அழிந்துபட்டன போக எஞ்சிய ஒன்றே இதுவாகும். |