சாஸ்திரம்பாக்கம்

அமைவிடம் - சாஸ்திரம்பாக்கம்
ஊர் - சாஸ்திரம்பாக்கம்
வட்டம் - செங்கல்பட்டு
மாவட்டம் - செங்கல்பட்டு
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை, கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

ஆற்றங்கரைகளில்தான் மனிதநாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. வடதமிழகத்தின் பாலாற்றங்கரையோரம் பல்வேறு கிராமங்களில் பெருங்கற்கால மக்களின் நாகரிகம் சார்ந்த பல நினைவுச் சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன. குறிப்பாக செங்கற்பட்டு மாவட்டம் பாலூர் அருகே உள்ள சாஸ்திரம்பாக்கம், பழவேரி, புலிப்பாக்கம், பினாயூர் போன்ற இடங்களில் பெருங்கற்கால மக்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த நான்கு கிராமங்களில் முதுமக்கள் தாழிகள், கற்பதுக்கைகள் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இவை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனக் கருதமுடிகிறது. சாஸ்திரம்பாக்கத்தில் முதுமக்கள் தாழி, கற்பதுக்கைகளுடன், கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், மருந்து அரைக்கும் உரல்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த முதுமக்கள் தாழிகளில்6 அடி முதல் 15 அடிவரை உள்ள ஒரு குடுவை போன்ற வடிவத்தில் இறந்தவரின் உடலோடு அவர்பயன்படுத்திய பொருட்களையும்வைத்து பூமிக்கடியில் புதைத்துள்ளனர். இதுபோல் எண்ணற்ற நினைவுச் சின்னங்கள் இந்தப் பகுதிகளில் புதைந்துள்ளன.

ஒளிப்படம்எடுத்தவர் - இந்து தமிழ் நாளிதழ்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

பாலூர் அருகே உள்ள சாஸ்திரம்பாக்கத்தில் பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களை புதைத்த முதுமக்கள் தாழி மற்றும் அதன் மேல் வைக்கப்பட்டுள்ள கல்பதுக்கைகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள இவ்விடம் பெருங்கற்காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும். எனவேதான் இத்தகு ஈமக்காடும் அமைந்துள்ளது. சாஸ்திரம்பாக்கம் அகழாய்வு செய்யப்பட வேண்டிய பெருங்கற்காலப் பகுதியாகும்.