நாட்டுக்கல்பாளையம்

    அமைவிடம் - நாட்டுக்கல்பாளையம்
    ஊர் - நாட்டுக்கல்பாளையம்
    வட்டம் - பொள்ளாச்சி
    மாவட்டம் - திருப்பூர்
    வகை - நெடுங்கல்
    கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    விளக்கம் -

    நாட்டுக்கல்பாளையம் பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் காரத்தொழு என்னும் ஊரிலிருந்து பிரியும் சாலையில் அமைந்துள்ளது. சிற்றூரான நாட்டுக்கல்பாளையத்தில் பெருங்கற்காலத்து நினைவுச் சின்னங்களுள் ஒன்றான நெடுநிலை நடுகல் ஒன்று உள்ளது. இதனை ஆங்கிலத்தில் (MENHIR)  என்று குறிப்பிடுவர். பதினைந்திலிருந்து இருபது அடிகள் உயரத்தில் நெடியதாய் செங்குத்தாக நிற்கும் ஒரு பலகைக்கல் போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. அடிப்புறத்தே அகலமாகத் தொடங்கி, உயரம் செல்லச் செல்லக் குறுகி முடியும் இந்த நெடுங்கல் ஒரு வீரனுக்கு அல்லது ஒரு  தலைவனுக்கு எழுப்பப்பட்ட நினைவுக்கல்லாகும்.

    ஒளிப்படம்எடுத்தவர் - து.சுந்தரம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்