கோனாங்குட்டை

அமைவிடம் - கோனாங்குட்டை
ஊர் - கோனாங்குட்டை
வட்டம் - செங்கம்
மாவட்டம் - திருவண்ணாமலை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கோனாங்குட்டை காட்டுப் பகுதியில் அழிந்துவரும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியர் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலம் கற்கால மனிதர்களின் வாழ்வியல் இடத்தை கண்டுபிடிக்க முடியும். கல் வட்டங்களை ஏற்படுத்தி இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை கற்கால மனிதர்களிடையே இருந்துள்ளது. அதன் மறு உருவமாகத்தான், நினைவுச் சின்னங்கள் அமைக்கும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும். கல் பதுக்கை, கல் திட்டை, கல் வட்டம், கல் குடுவை என்று நினைவுச் சின்னங்களைப் பல பிரிவுகளாக தொல்லியில் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். செங்கம் அருகே கோனாங் குட்டை காட்டுப் பகுதியில் 500-க் கும் மேற்பட்ட கல்வட்டங்களை காணலாம்.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

செங்கம் அருகே உள்ள கோனாங்குட்டை ஒரு முல்லைநிலப் பகுதி. இங்கு பெருங்கற்காலத்தில் ஆநிரைப் பூசல்கள் பல நடைபெற்றிருக்கலாம். ஏனெனில் செங்கம் பகுதியிலேயே ஆநிரைப் பூசலில் உயிர் நீத்த வீரர்களுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகற்கள் அதிகம் காணப்படுகின்றன. அவ்வகையில் கோனாங்குட்டை ஊரின் காட்டுப்பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வட்டங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.