கோத்தகிரி

அமைவிடம் - கோத்தகிரி
ஊர் - கோத்தகிரி
வட்டம் - கோத்தகிரி
மாவட்டம் - நீலகிரி
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் எஸ்டேட் பகுதியில் காணப்படும் கற்திட்டைகள் அடிப்பக்கத்தில் கற்கள் வரிசையாக உயரத்திற்காக அடுக்கப்பட்டு அதற்கு மேல் பலகைக் கற்கள் நான்குபுறமும் வைக்கப்பட்டு மேலே மூடுகல் பெற்றுள்ளன. இவ்விடத்திலும் பல கற்திட்டைகள் சிதைக்கப்பட்டு உள்ளன. கோத்தகிரி வாழ் பழங்குடி மக்கள் வழிபாட்டிடமாக இங்குள்ள கற்திட்டைகள் விளங்குகின்றன. ஆண்டிற்கொருமுறை இவ்விடத்தில் பழங்குடியினரால் சடங்குகள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது மரபுரீதியான நீத்தார் வழிபாடாக கருதப்படுகின்றது.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வாழும் பகுதியான கோத்தகிரியில் மலைப்பாங்கான பகுதிகளில் கற்திட்டைகள் காணப்படுகின்றன. இக்கற்திட்டைகள் தற்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படுகின்றது. பல கற்திட்டைகள் சிதைவுபட்டுள்ளமை தெரிகிறது. இக்கற்திட்டைகள் வழிபாட்டில் உள்ளன.