சிறுதாவூர்

அமைவிடம் - சிறுதாவூர்
ஊர் - சிறுதாவூர்
வட்டம் - திருப்போரூர்
மாவட்டம் - செங்கல்பட்டு
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ள சிறுதாவூர் பகுதியில் காணப்படும் கல்வட்டங்கள் சிறியதும் பெரியதுமானவை. சிறிய கல்வட்டங்கள் நான்கு அல்லது ஐந்து கற்கள் சுற்றியிருக்க அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கல்வட்டங்கள் 25-க்கும் மேற்பட்ட உருண்டை கற்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதியாக சிறுதாவூர் இருப்பதால் இங்கு பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் கல்வட்டங்கள் அமைக்கப்பட்டிருத்தல் இயல்பானதாகக் கருத இடமுண்டு. சிறிய கல்வட்டங்கள் காணப்படுவது சிறார்களுக்கானவையா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூர் மலைப்பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இக்கல்வட்டங்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளன.