சென்னசந்திரம்

அமைவிடம் - சென்னசந்திரம்
ஊர் - சென்னசந்திரம்
வட்டம் - ஓசூர்
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னசந்திரம், கரியசந்திரம், ஆகிய இடங்களில் உள்ள கல்வட்டங்களை தங்களின் மூதாதையர் வழிபாட்டுத் தலங்களாக குறும்பர் பழங்குடி இனத்தவர் குறிப்பிடுகின்றனர். ஒன்று “முத்தப்பன் சந்து” எனவும்,  மற்றொன்று “சித்தப்பன் இறந்த குட்டை” அல்லது “கல்லுக்குட்டை சித்தப்பா” எனவும், அழைக்கின்றனர். சித்தப்பா இவர்களுடைய குடும்பங்களின் ஆதிதெய்வமாகும்.  குறுமன்களின் மூதாதையரான சித்தப்பன் இனக்குழுவின் தலைவராகவோ, குழுவின் மூத்தவராகவோ, இருந்திருக்கலாம். அவர் இறந்த பிறகு அவரைப் புதைத்த இடத்தில் கற்குவியல் உருவாக்கப்பட்டு வழிபட்டு வருகின்றனர் என இவ்வின மூத்தோர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

சென்னசந்திரத்தில் உள்ள கல்வட்டங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுடைய ஆரத்தை உடையனவாக காட்சியளிக்கின்றன. கல்வட்டங்கள் அமைக்கும் பொழுது கணக்கீட்டு முறையில் வட்டம் வரையப்பட்டு அதன்மேல் இக்கற்கள் வட்ட வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.