வரட்டனபள்ளி

அமைவிடம் - வரட்டனபள்ளி
ஊர் - வரட்டனபள்ளி
வட்டம் - கிருஷ்ணகிரி
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கற்காலக்கருவிகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்காலக்கருவிகள்
பண்பாட்டுக் காலம் - புதிய கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

இப்பகுதியில் தாமிரபாளையம் என்ற சுனையும், நீரூற்றும் உள்ளது. இப்பகுதியில் கீழைப் பழங்கற்காலக் கருவிகளும், செதில்களும் காணப்படுகின்றன. இங்கு கைக்கோடரிகள், சுரண்டிகள், வட்டச் சில்லுகள் மற்றும் செதில் கருவிகள் கிடைக்கின்றன. இங்கு இயற்கையாக ‘டாலரைட்’ எனப்படும் கற்கள் கிடைப்பதால் அவை கற்கருவிகள் செய்யப்படுத்தப்பட்டுள்ளன. இக்கருவிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் வேட்டையாடி உணவு சேகரித்த மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பரந்தாமன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

வரட்டனபள்ளி ஒரு தொல்பழங்கால ஊராகும். தமிழகத்தில் கீழைப் பழங்காலக் கருவிகள் கிடைக்கும் சிறப்பான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இவ்வூர் கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திராவில் உள்ள குப்பம் செல்லும் சாலையில், சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூருக்குக் கிழக்கே ஏர்ரகெட்டு என்ற மலையின் அடிவாரத்தில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இவ்வூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது.

குறிப்புதவிகள் - Indian Archaeology – A Review 1990-91:128