திருச்சிற்றம்பலம்

அமைவிடம் - திருச்சிற்றம்பலம்
ஊர் - திருச்சிற்றம்பலம்
வட்டம் - கிருஷ்ணகிரி
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கற்காலக்கருவிகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்காலக்கருவிகள்
பண்பாட்டுக் காலம் - புதிய கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் புதியகற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரிகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கற்கோடரிகள் வழவழப்பாகவும், கூர்மையாகவும் செய்யப்பட்டுள்ளன. புதியகற்காலத்தில் வடிவமைக்கப்பட்ட இக்கோடரிகளின் தொழில்நுட்பம் வியக்கத்தக்கது. ஏனெனில் புதியகற்காலக் கருவிகள் பழைய கற்காலக் கருவிகளோடு ஒப்பிடுகையில் அளவில் சிறியவை.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பரந்தாமன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் என்னும் பகுதியில் புதியகற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைக்கின்றன. இப்புதிய கற்காலக்கருவிகள் இப்பகுதி மக்களால் வழிபாட்டில் உள்ளன.