தொளுவபெட்டா

அமைவிடம் - தொளுவபெட்டா
ஊர் - தொளுவபெட்டா
வட்டம் - தேன்கனிக்கோட்டை
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கற்காலக்கருவிகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்காலக்கருவிகள்
பண்பாட்டுக் காலம் - புதிய கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள தொளுவபெட்டா ஒரு புதியகற்கால வாழிடமாகும். இங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன. புதிய கற்காலக் கருவிகளைப் பொறுத்தவரை வழவழப்பானவை. மெருகூட்டப்பட்டவை. சிறிய அளவில் ஆனவை.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பரந்தாமன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொளுவபெட்டா என்னும் கிராமத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள் உள்ளிட்ட கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கருவிகள் இங்குள்ள மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.