கொட்டையூர்

அமைவிடம் - கொட்டையூர்
ஊர் - கோட்டையூர்
வட்டம் - அஞ்செட்டி (ஆஞ்செட்டி)
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கோட்டையூரில் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னமான கல்வட்டங்கள் காலத்தால் மிகவும் பழமையானவை. கல்வட்டத்தில் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள கற்கள் ஒரு சீரற்ற நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில் வைக்கப்படும் ஈமச்சின்னங்கள் காலத்தால் முந்தியவை என்று தொல்லியல் அறிஞர்களால் கூறப்படுகிறது. செம்மைப்படுத்தப்படாத நிலையில் கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பரந்தாமன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கோட்டையூர் கிருட்டிணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இக்கிராமம் ஒரு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஊராகும். இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்களுள் ஒன்றான கல்வட்டங்கள் காணப்படுகின்றன.