ஒத்திக்குப்பம்

அமைவிடம் - ஒத்திக்குப்பம்
ஊர் - ஒத்திக்குப்பம்
வட்டம் - பர்கூர்
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்தில் உள்ள ஒத்திக்குப்பம் என்னும் ஊரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் கற்திட்டைகள் மலைப்பாறைகளில் மீது அமைகப்பட்டுள்ளன. கற்திட்டையின் மூடுகல் பெரியதாகக் காணப்படுகிறது. ஆனால் கற்திட்டைகளில் வழக்கமாக நாற்புறமும் காணப்படும் பலகைக்கல் இங்கு காணப்படவில்லை. அதற்குப் பதிலாக உருளைக் கற்கள் மூடுகல்லை தாங்கும் பொருட்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இத்தகைய கற்திட்டை வடிவங்கள் பிற்காலத்தியதா? அல்லது சிதைந்த பின்பு தற்காலத்தில் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளதா என்பது ஆராயத்தக்க ஒன்று.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பரந்தாமன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கிருஷ்ணகிரி, பர்கூர் வட்டாரத்தில் உள்ள ஒத்திக்குப்பம் ஒரு பெருங்கற்கால ஈமக்காடாகும். இங்கு ஈமச்சின்னங்களுள் ஒன்றான கற்திட்டைகள் காணப்படுகின்றன. ஒத்திக்குப்பம் கற்திட்டை பொதுவான கற்திட்டைகளைப் போன்ற அமைப்பில் இல்லை. மூடுகல் மட்டுமே கொண்டுள்ளதாக விளங்குகிறது.