ஜமீன்பல்லாவரம்

அமைவிடம் - ஜமீன்பல்லாவரம்
ஊர் - ஜமீன்பல்லாவரம்
வட்டம் - ஆலந்தூர்
மாவட்டம் - சென்னை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

சென்னையைச் சேர்ந்த ஆலந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஜமீன் பல்லாவரம் ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னங்களைக் கொண்ட பகுதியாகும். காலவோட்டத்தில் இங்குள்ள ஈமச்சின்னங்கள் அழிவுபட்டன. இருப்பின் ஒன்றிரண்டு கல்வட்டங்கள் தனியார் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வட்டங்கள் கொடுமணல் கல்வட்டங்களைப் போன்று செம்மையான வடிவில் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பவானி பிரபாகர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்தின் ஒரு பகுதியான ஜமீன் பல்லாவரம் என்னுமிடத்தில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இக்கல்வட்டங்கள் இப்பகுதி குடியிருப்புப் பகுதியாக மாறிவருவதால் அழிந்து வருகின்றன. எனினும் எஞ்சிய ஓரிரு கல்வட்டங்களைக் கொண்டு இப்பகுதி ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னப்பகுதியாக கருத முடிகிறது.